குற்றியலுலகத்தின் முகம்

அன்புள்ள பாரா,

நான்கு பக்கத்தில் சொல்ல வேண்டியதை நாலு வரியில் சொல்கிறவன்தான் சிறந்த எழுத்தாளன் என்பது போல் நாற்பது வண்ணங்களை வைத்து விலாவரியாக வரைய வேண்டிய ஓவியத்தை நாலு கோடுபோட்டு கிறுக்கிச் சொல்பவன்தான் சிறந்த ஓவியம் என்பேன். முகம் என்ற தலைப்பிலான பேயோனின் ஓவியத்தைப் பார்த்தவுடன் அப்படித்தான் தோன்றியது. அதைப் பார்த்து “அட” என்று வியந்தவர்களில் நானும் ஒருவன். பேயோன் சாதாரண ஆளல்ல. அவர் ஒரு அறிவு ஜீவி என்று மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் போது தோன்றியது.

உங்கள் குற்றியலுகரம் புத்தகம் பேயோனின் ஓவியத்தை அட்டையில் தாங்கி வந்ததைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. உங்களின் ரத்தினச் சுருக்க ட்விட்டர் இலக்கிய (சரி.. சரி.. கமர்ஷியல்தான்) புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான அட்டை அமையாது.

புத்தகம் வெற்றிபெற வாழ்த்துகள். பாம்புத்தைலத்தோடு சேர்ந்து நிச்சயம் வாங்கிவிடுகிறேன்.

அன்புடன்
சித்ரன்

அன்புள்ள சித்ரன்

பாம்புத்தைலம் ஆழியில் உள்ளது. என்னுடையது மதி நிலையத்தில்.  அட்டைப்படத்துக்கே இத்தனை வரிகள் செலவிட்டவர், படித்தபிறகு என்ன செய்வீர்கள் என்று எண்ணிப்பார்த்து கதி கலங்குகிறேன் :-)

பாரா/

read more

எனக்காக மட்டும்

அவர் அப்போதுதான் சிம்பொனி முடித்து, திரும்பி வந்திருந்தார். அடையாறு பார்க் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. சிம்பொனி கிம்பொனியெல்லாம் எனக்குப் பிரமாதமில்லை. ராஜாவைப் பார்க்க ஒரு தருணம். போதும். புறப்பட்டுவிட்டேன்.

ஆனால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று வினோதமாக இருந்தது. ராஜாவின் மொழி, அவர் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பதைச் சரியாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. அவராக விளக்கிச் சொன்னாலொழிய மற்றவர்களுக்குப் புரியும் சாத்தியமும் இல்லை.

read more

அதிமுக்கிய அறிவிப்பு

என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச் சேர்ந்தது.

இந்நூலின் தனிச்சிறப்பு என்பது, தமிழன் வாங்கக்கூடிய சகாய விலையில் இது வெளிவந்திருப்பது. (ரூ. 40) வாசிக்கவும் நன்றாக இருக்கும் என்பது இரண்டாம் தனிச்சிறப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதில் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், சரித்திரம், சாப்பாடு, சங்கீதம், சினிமா, தொலைக்காட்சி, விளையாட்டு, சாராயம் உள்ளிட்ட சகலவிதமான நூதனாதி விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே இத்தனை பல்வேறுதரப்பட்ட சங்கதிகளை ஒரே நூலில் விவாதிப்பதென்பது இதுவே முதல் முறை என்பது வாசகப் பெருமக்களுக்குத் தெரியும் என்பதால் அது குறித்துப் பெரிதாகப் பிரஸ்தாபிக்க விரும்பவில்லை.

மேற்கண்ட புகைப்படத்தில், குற்றியலுலகம் நூல் வெளியாகிவிட்ட தகவலை எடுத்துக்காட்டி அறிவிப்பவர், என் நண்பர் பார்த்தசாரதி.

நாளை கண்காட்சிக்குச் செல்ல உத்தேசிக்கிறேன் என்பது உபரித் தகவல்.

read more

சயந்தனின் ஆறா வடு வெளியீட்டு விழா

தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.

ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.

புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.

read more

இந்த வருடம் என்ன செய்தேன்?

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில திட்டங்கள் வகுப்பேன். கூடியவரை அதன்படியே நடக்க முயற்சி செய்வேன். பெரும்பாலும் சொதப்பியதில்லை. ஏனெனில் சாய்ஸில் விடுவதற்கென்றே எப்போதும் சிலவற்றைச் சேர்த்து திட்டமிடுவது என் வழக்கம்.

ஆனால் இந்த 2011 மட்டும் எனக்கு வேறு மாதிரி அமைந்தது. திட்டமிட்ட எதையும் செய்யாமல், திட்டமிடாத எத்தனையோ காரியங்களை இந்த ஆண்டு செய்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால், முற்றிலும் மற்றவர்களால் இயக்கப்பட்ட வாழ்க்கையை மட்டுமே இந்த ஆண்டு நான் வாழ்ந்திருக்கிறேன். இதற்குமுன் இப்படி இருந்ததில்லை.

read more

குற்றியலுலகம்

ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.

read more

பானைக்குள் பூதம்

ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள்.  ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது.

கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி.

read more