New Projects

2008ம் ஆண்டு தொடக்கம், நான் செய்துகொண்டிருக்கும் எழுத்துப் பணிகள் இவை:

திரைப்படங்கள்:

1. கனகவேல் காக்க  [ஆகர்ஷினி தியேட்டர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் கதாநாயகன் கரன். கதாநாயகியாகப் புதுமுகம் ஹரிப்ரியா. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இயக்குநர் சரணிடம் இணை இயக்குநராக இருந்த கவின் பாலா இதனை இயக்குகிறார். இப்படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

2. நாஞ்சில் : ஐந்தாம் திசை  [இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் இணை இயக்குநராக இருந்த வடிவுடையான் இயக்கும் படம். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்துக்கு வசனம் எழுதுகிறேன்.]

3. கொம்பன்  [இயக்குநர் ஹரியிடம் பணியாற்றிய சஜோ சுந்தர் இதன் இயக்குநர். நான் வசனம் எழுதுகிறேன். பிற விவரங்கள் விரைவில்.]

4. பெயரிடப்படாத இன்னொரு திரைப்படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் மூன்றும் எழுதுகிறேன்.

தொலைக்காட்சித் தொடர்:

1. சிவசக்தி  [ஹோம் மீடியா பிரைவேட் லிமிடெட், சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் 16.06.2008 திங்கள் முதல் நாள் தோறும் சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஷமிதா [பாண்டவர் பூமி], ரேணுகா, பூவிலங்கு மோகன், விஜய் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் நடிக்க, அசோக் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்கம் சுந்தரமூர்த்தி [மெட்டி ஒலி திருமுருகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்]. இத்தொடருக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தேன். பணிச்சுமை மிகவும் அதிகரித்ததன் காரணமாக இடையில் விலகிக்கொண்டேன்.]

பத்திரிகை தொடர்கள்:

1. குமுதம் ரிப்போர்ட்டரில் ‘யுத்தம் சரணம்’ - இலங்கை தமிழர் போராட்ட சரித்திரம் 23.11.2008 இதழில் தொடங்கியிருக்கிறது.

2. ஆயில் ரேகை - எண்ணெய் அரசியல் குறித்த தொடர். குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் 18.06.2008 முதல் வெளியாகி முப்பது அத்தியாயங்களில் முற்றுப்பெற்றது. உலகம் முழுவதையும் கொதிப்படையச் செய்திருக்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கான காரணங்களை ஆராய்ந்த இந்தத் தொடர், விரைவில் புத்தகமாக வெளியாகும்.

3. கால் கிலோ காதல் அரைக்கிலோ கனவு - கல்கியில் வெளியான எளிய நகைச்சுவை கூடிய காதல் தொடர். முடிவடைந்துவிட்டது.

புத்தகங்கள்:

1. காஷ்மீர் - வெகுநாள்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் முடிந்தபாடில்லை.
2. முஹம்மத் - முஹம்மத் நபியின் வாழ்க்கை வரலாறு - அவரது குறிப்புகளின் வாயிலாகவே.